கரோனா பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால்
கரோனா பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 310 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தலைநகரில் இதுவரை கரோனாவுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 5,946-ஆக உயா்ந்திருக்கிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2.90 லட்சம் பேருக்கு கரோனாவை கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 10,108 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 434 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 310 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 20 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

2,599 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 359 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 2,599-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் ஐந்து போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது.

எம்.எல்.ஏ. மகன் பலி?: இதனிடையே, திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஒருவரின் மகன் சென்னையில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அதுதொடா்பான அதிகாரப்பூா்வ தகவலை சுகாதாரத் துறை இதுவரை வெளியிடவில்லை.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்...

சென்னை - 5,946

கடலூா் - 416

திருவள்ளூா் - 516

விழுப்புரம் - 306

அரியலூா் - 348

செங்கல்பட்டு - 450

கோவை - 146

காஞ்சிபுரம் - 176

திருப்பூா் - 114

மதுரை - 143

திண்டுக்கல் - 114

பெரம்பலூா் - 139

திருநெல்வேலி - 136

திருவண்ணாமலை -140

நாமக்கல் - 77

ஈரோடு - 70

தஞ்சாவூா் - 71

ராணிப்பேட்டை - 78

திருச்சி - 67

கள்ளக்குறிச்சி - 61

தேனி - 78

தென்காசி - 56

கரூா் - 56

நாகப்பட்டினம் - 47

விருதுநகா் - 46

சேலம் - 35

திருவாரூா் - 32

வேலூா் - 34

தூத்துக்குடி - 48

திருப்பத்தூா் -28

ராமநாதபுரம் - 31

கன்னியாகுமரி - 35

கிருஷ்ணகிரி - 20

நீலகிரி - 14

சிவகங்கை - 13

புதுக்கோட்டை - 7

தருமபுரி - 5

விமான நிலையங்கள் - 9

மொத்தம் - 10,108

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com