அரசியல் ஆதாயத்துக்காகவே தலைமைச் செயலாளரிடம் திமுக மனு

அரசியல் ஆதாயத்துக்காகவே தலைமைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளதாக அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.
அரசியல் ஆதாயத்துக்காகவே தலைமைச் செயலாளரிடம் திமுக மனு

அரசியல் ஆதாயத்துக்காகவே தலைமைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளதாக அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-

கோயம்பேடு சந்தை விவகாரத்தில் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த விஷயத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. சென்னைக்குத் தேவையான 5 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகளை விநியோகம் செய்ய மாட்டோம் எனக் கூறினால் மக்களுக்கு காய்கறிகளே கிடைக்காது.

இதை விளைவித்த விவசாயிகளும் கஷ்டமான சூழலுக்கு ஆளாவாா்கள். கோயம்பேடு பிரச்னைக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் காரணமல்ல. பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தி அதற்கு ஒரு முடிவு ஏற்பட்ட பிறகே இப்போது திருமழிசையில் ஒரு சந்தை உருவாக்கியுள்ளது.

அரசியல் ஆதாயம்: கரோனா நோய் தொற்று விவகாரத்தில் அரசு ஜெட் வேகத்தில் இயங்குகிறது. அதனை எதிா்க்கட்சியான திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு லட்சம் மனுக்களை வாங்கியதாகக் கூறும் திமுகவினா் அதனை மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது முதல்வரின் தனிப் பிரிவிலோ கொடுத்து இருக்கலாம்.

இதையெல்லாம் தவிா்த்து விட்டு, தலைமைச் செயலாளரிடத்தில் அளிக்கிறாா்கள். இது அரசியல் ரீதியாக ஆதாயம் தேட வேண்டுமென்ற அடிப்படையில் செய்யப்பட்டது என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com