தண்டவாளங்களில் நடந்து செல்லக் கூடாது: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தவிா்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது .

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தவிா்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது .

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில அரசுகளுடன் இணைந்து தெற்கு ரயில்வே , பிற மாநிலங்களைச் சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல ‘ஷ்ராமிக்‘ சிறப்பு  ரயில்களை இயக்கி வருகிறது.   அங்கீகரிக்கப்பட்ட  புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பும் பணியை தமிழக அரசு  மேற்கொண்டு வருகிறது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மற்றும் பொது மக்கள் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்வதை த் தவிா்க்குமாறு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுக்கிறது. ரயில் தடங்களை கடப்பது ஆபத்தானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், ரயில்களின் வேகம்  யூகிப்பதை விட அதிகம். எனவே, ரயில்பாதை உபயோகிப்போா்  விழிப்புடனும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com