புலம்பெயர் தொழிலாளர்கள் சங்ககிரி தனிமை முகாமிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

வெளி மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் சங்ககிரி தனிமை முகாமில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சங்ககிரி தனிமை முகாமிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

வெளி மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் சங்ககிரி தனிமை முகாமில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த கூலித்தொழிலாளர்கள் 80 பேர் பாதுகாப்பு கருதி சங்ககிரியில் இரு தனிமை முகாம்களில் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதியானதையடுத்து சனிக்கிழமை அவர்கள் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் அரசு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கத்தையொட்டி சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் சங்ககிரி பகுதிகளில்  மூன்று இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு  லாரிகள், மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகளையும்  சோதனை செய்து வருகின்றனர். 

குப்பனூர் சோதனைச்சாவடியில் கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள தனியார் மிளகு, காஃபி தோட்டங்களில்  சேலம் மாவட்டம், கருமந்துறை, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம்  வட்டப்பகுதிகளைச் பகுதிகளைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 80 பேர் வெள்ளிக்கிழமை சொந்த ஊர்களுக்குத் திரும்பியது தெரியவந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரியை அடுத்துள்ள வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 51 பேரும், பால்வாய் அரசு மாணவர் விடுதியில் 29 பேரும் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர். 

இரு முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு அதற்கான அறிகுறிகள் இல்லையென்று தெரிய வந்ததையடுத்து சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் கருமந்துரைக்கு இரண்டு பேருந்துகளிலும், ஆத்தூருக்கு ஒரு அரசுப்பேருந்துகளிலும் அனுப்பி வைத்தனர்.  

பேருந்துகளில் சென்ற தொழிலாளர்களின் கையில் சுகாதாரத்துறையின் சார்பில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற சீல் வைக்கப்பட்டன. தனிமை முகாமிலிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிய கூலித்தொழிலாளர்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com