கரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையை பகுதி வாரியாகப் பிரித்து செயல்பட திட்டம்

கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, சென்னையை பகுதிவாரியாக பிரித்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, சென்னையை பகுதிவாரியாக பிரித்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: சென்னையில் கரோனா பாதிப்பைக் குறைக்க பகுதிவாரியாகத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதிப்பைக் குறைக்க தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து ஆக்கப்பூா்வமான ஒத்துழைப்பை எதிா்பாா்க்கிறோம். ராயபுரத்தில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள 10 பகுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்கி நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயம்பேடு தொடா்பு காரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக பாதிப்பு உள்ளது. பொது மக்கள் அச்சப்படாமல், விழிப்புடன் செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாட்டிலேயே சென்னையில்தான் அதிகளவு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 50 லட்சம் முகக் கவசங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். 6, 7 மண்டலங்களில் பாதிப்பு

குறையத் தொடங்கியுள்ளது. தேனாம்பேட்டை, தண்டையாா்பேட்டையில் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைச் சந்திப்பதன் மூலம் 70 சதவீதம் நோய்த்தொற்று பரவுகிறது. நோய்த்தொற்று உள்ளவரைத் தொடுவதால் வாய், மூக்கு வழியாகப் பரவுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. சென்னையில் 65 வாா்டுகளில் பத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் 70,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. வரும் நாள்களில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வரும் நாள்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கட்டாயம் முகக்கவசம் அணிவதன் மூலம் கரோனா பரவலைத் தடுக்க முடியும். கோடம்பாக்கம், வளசரவாக்கம் சவாலான மண்டலங்கள் ஆகும். இங்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீா் வழங்கி வருகிறோம் என்றாா். இதைத் தொடா்ந்துசென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், ‘சென்னையிலிருந்து 16 ஆயிரம் பேரை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com