நோய் தடுப்பில் அமெரிக்க அரசியல்வாதிகளின் முயற்சி உண்மையா?

ஜனவரி 11ஆம் நாள் பெரும்பாலானோர் என்ன நிகழ்கிறது என்று அறியாத நிலையில் இருந்தனர்.
நோய் தடுப்பில் அமெரிக்க அரசியல்வாதிகளின் முயற்சி உண்மையா?

ஜனவரி 11ஆம் நாள் பெரும்பாலானோர் என்ன நிகழ்கிறது என்று அறியாத நிலையில் இருந்தனர். அப்போது தான் நாங்கள் தடுப்பூசி ஆய்வில் ஈடுபடத் துவங்கினோம் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 15ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆனால், ஜனவரி இறுதியில் தான் புதிய ரக கரோனா வைரஸ் பற்றி அறிந்து கொண்டதாக அவர் முன்னர் பல முறை தெரிவித்திருந்தார். எந்தக் கூற்று உண்மை என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

இப்படி முன்னதாக வைரஸின் அபாயத்தை அறிந்து கொண்டால், மார்ச் 13ஆம் நாள் வரை பொது மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அறிவிக்காத்து ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தவிரவும், தகவல் தொடர்புத் துறையின் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்கா அண்மையில் வலுப்படுத்தியுள்ளது. தற்போது தேசிய நிலை தொலைக்காட்சியின் செய்திகளில் அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் காட்டப்படுவது இல்லை என்று அமெரிக்க சிஎன்என் தெரிவிதுள்ளது. அறிவியல் துறை அமெரிக்க அரசியல்வாசிகளின் கால்களால் நசுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நோய் தடுப்பு நடவடிக்கைள் அனைத்தும் நிர்வாக அதிகாரத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செங் யூங்நியேன் சுட்டிக்காட்டினார்.

சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com