Enable Javscript for better performance
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேமிப்புத்  தொகை: சிறுமியின் சைக்கிள் ஆசையை நிறைவேற்றிய எஸ்.பி.- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேமிப்புத்  தொகை: சிறுமியின் சைக்கிள் ஆசையை நிறைவேற்றிய எஸ்.பி.

    By DIN  |   Published on : 19th May 2020 03:54 AM  |   அ+அ அ-   |    |  

    சிறுமி கனகாவுக்கு சைக்கிள் வழங்கிய மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம்.

    சிறுமி கனகாவுக்கு சைக்கிள் வழங்கிய மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம்.

    நாகப்பட்டினம்:  சைக்கிள் வாங்க வைத்திருந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி அவரது சகோதரருக்கு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம்  திங்கள்கிழமை சைக்கிள்களை வழங்கினார்.

    நாகை மாவட்டம், காமேஷ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர்  பூமாலை. விபத்தில் ஒரு கையை  இழந்த இவர்  தற்போது நாகை மாவட்டக் காவலர் - நண்பர்கள் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு கரோனா விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது 10 வயது மகள் கனகா சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2,210ஐ தமிழக முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயரை அண்மையில் நேரில் சந்தித்து வழங்கினார்.

    இந்நிலையில், காவல்துறை இயக்குநர் டாக்டர் பிரதீப் வி.  பிலீப்( தமிழ்நாடு உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு) மற்றும்  காவலர் - நண்பர்கள் குழு சார்பில் சிறுமி கனகா, அவரது சகோதரர் கோகுல் ஆகியோருக்கு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  செ. செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை சைக்கிளை வழங்கி பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai