தஞ்சாவூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்: ஆட்சியர் பேட்டி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர் என்று மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கூறியுள்ளார். 
தஞ்சாவூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்: ஆட்சியர் பேட்டி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர் என்று மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கூறியுள்ளார். 

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸôல் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். தற்போது, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் கரோனா வைரஸôல் பாதிக்கப்பட்டு இங்கு வந்தவர்கள்தான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 

எனவே, சோதனைச் சாவடிகளில் காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், செங்கிப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரி போன்றவற்றில் தங்க வைத்து, தனிமைப்படுத்தப்படுவர். 

வெளி நாட்டிலிருந்து விமானத்தில் திரும்பி வருபவர்கள், ஓட்டல்களில் தங்க விரும்பினால், அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 30 ஓட்டல்களில் 450 அறைகளை முன் பதிவு செய்துள்ளோம். வருபவர்கள் கட்டணம் செலுத்தித் தங்கிக் கொள்ளலாம். 

அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதலின்படி, வெளி மாநிலங்களிலிருந்தோ அல்லது கரோனா பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்தோ வந்தால் அவர்களுக்குப் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா தொற்று இல்லை என்றால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கரோனா தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து உள்ளே வரும்போது சோதனைச் சாவடிகளில் முழு வீச்சில் சோதனை செய்யப்படுகிறது. சோதனைச் சாவடியைத் தவிர்த்துக் குறுக்கு வழியில் யாராவது ஊருக்குள் வந்தது தெரிய வந்தால், மாவட்ட நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com