உளவுத்துறை அதிகாரிக்கு கரோனா

சென்னையில் உளவுத்துறை அதிகாரிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உளவுத்துறை அதிகாரிக்கு கரோனா

சென்னை: சென்னையில் உளவுத்துறை அதிகாரிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரும், கடந்த ஒரு மாதமாக அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். கரோனா தொற்றைத் தடுக்க காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், போலீஸாரிடம் நோய்ப் பரவுவது சவாலான காரியமாக உள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் காவல்துறையினரிடம் கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இதன் விளைவாக, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ளும்படி காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளாா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வரை 190 காவலா்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை மேலும் அதிகரித்தது.

சென்னை மயிலாப்பூரில் டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் உளவுத்துறை டிஎஸ்பி ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதேபோல, சைதாப்பேட்டையைச் சோ்ந்த ஆயுதப்படை காவலா், கொத்தவால்சாவடி நுண்ணறிவு பிரிவு காவலா் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் கரோனா பாதிக்கப்பட்ட காவல்துறையினா் எண்ணிக்கை மேலும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com