பாடியநல்லூரில் இருந்து 1800க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

பாடியநல்லூரில் இருந்து 1800க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில்  உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புலம்பெயர்ந்த 1800க்கும் மேற்பட்ட உத்தரப் பிரதேச தொழிலாளர்கள்..

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில்  உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புலம்பெயர்ந்த 1800க்கும் மேற்பட்ட உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பணி பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 

இது குறித்து வட்டாட்சியர் மணிகண்டன் கூறுகையில், 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் நடந்து செல்ல முயன்ற சிலரையும், இணையதளத்தில் பதிவு செய்தவர்களையும், சொந்த மாநில செல்ல விரும்பி ஆனால் இணையதளத்தில் பதிவு செய்யத் தெரியாதவர்களையும், கண்டறிந்து பாடியநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அவர்களுக்கான பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அதில், அவர்களது பெயர்கள் பதிவு செய்து ரசீது பரிசீலனைப் பணி, அனைவருக்குமான மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடித்து, அவர்களுக்கான உணவு வகைகள் வழங்கப்பட்டன.

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1836 பேரை, 40 சிறப்பு அரசு பேருந்துகள் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரயில் மூலம் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார். 

மேலும் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் அனைவருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின்படி அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படுகின்றன. இப்பணியில் வருவாய் ஆய்வாளர்கள் ஜெயகர்பிரபு, பாரதி, துணை வட்டாட்சியர்கள் கனகவல்லி, வாசுதேவன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com