நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை: இரா.முத்தரசன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கு மேலான பொருளாதார திட்ட அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை..
நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை: இரா.முத்தரசன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கு மேலான பொருளாதார திட்ட அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் தெரிவித்தார்.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தலா ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி,  இந்திய  கம்யூனில்ட் கட்சி சார்பில் நாகை, வெளிப்பாளையும் ரயில்வே ஸ்டேசன்  சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன்பு கருப்புக்கொடிஆர்ப்பாட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தலைமை வகித்த இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேலும் கூறியது: கரோனோ நோய்த் தொற்று காரணமாக உலகளவில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

தற்போது அமலில் உள்ள கரோனா பொது முடக்கத்தால் இந்தியா மிகப்பெரிய அளவுக்குப் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இது குறித்து கவலை கொள்ளதாக தெரியவில்லை.

பொது முடக்கத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறுதொழில் முனைவோர்களுக்கு   மத்திய அரசு இதுவரை எந்தவித உதவியையும் நேரடியாகச் செய்யவில்லை. இந்திய மாநிலங்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், நிதி ஆதாரங்கள் சீர் குலைந்திருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் தெரிவிக்கிறார். மாநில அரசுகளுக்கு உரிய உதவிகளைச் செய்யாமல் செய்யாமல்  5 சதவீதம் வரை வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற வெற்று அறிவிப்பை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி  மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகள் அந்தக் கடனை திருப்பி செலுத்தினால்  மட்டுமே புதிய கடன்களைப் பெறமுடியும் என்பது மத்திய நிதியமைச்சருக்கும் தெரியும்.ஆனால் மத்திய அரசு பொய்யான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை தற்போது பரிதாபத்துக்குரிய நிலையாக மாறியுள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளன.எனவே, இவர்களது வாழ்வுக்கு  உரிய உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். பாதிப்புக்குள்ளாகியுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும்.

தற்போதுள்ள சூழலில் 10}வகுப்பு அரசுப்பொதுத் தேர்வை நடத்துவது பொருத்தமாக இருக்காது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் மட்டும் 6 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இதில்   2 லட்சம் மாணவர்களை வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படித் தேர்வுக்கு வரமுடியாத நிலை ஏற்படும்.எனவே, பொது முடக்கம் சீரடைந்த பின்னர் மாணவர்களுக்கு ஒரு மாதக் காலத்துக்குப் பயிற்சியளித்த பின்னர் 10}ஆம் பொதுத்தேர்வை நடத்தவேண்டும்.

கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறந்துள்ளது.எந்த மதுக்கடையிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. மது விற்பனை செய்யும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. கஜானாவை நிரப்புவது மட்டும் அரசின் வேலையில்ல. மக்களின் உயிரையும் பாதுகாக்கவேண்டும். மத்திய அரசின் சார்பில்  ரூ .20 லட்சம் கோடிக்கு மேலான பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்ச நிர்மலா அண்மையில் அறிவித்தார். தொகை  அதிகம், பயன் குறைவு. இதனால்  எவ்வித பயனும் இல்லை என்றார் இரா. முத்தரசன்.

கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளர்  ஏ. சீனிவாசன், நாகை ஒன்றிய செயலாளர் கே. பாண்டியன், சிறுபான்மைப் பிரிவு மாநிலத்துணைத் தலைவர் ஏ.பி.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வி.சரபோஜி மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com