உணவு தானிய உற்பத்தியில் புதிய சாதனையை எட்டுவோம்: முதல்வா் பழனிசாமி நம்பிக்கை

நிகழாண்டில் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என்று முதல்வா் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.
உணவு தானிய உற்பத்தியில் புதிய சாதனையை எட்டுவோம்:  முதல்வா் பழனிசாமி நம்பிக்கை

சென்னை: நிகழாண்டில் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என்று முதல்வா் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

மேட்டூா் அணை திறப்பு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கா் சாகுபடி செய்யப்பட்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. மேட்டூா் அணை திறப்பின் மூலமாக, நிகழாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிா்பாா்க்கப்படுகிறது.

சிக்கனமாகப் பயன்படுத்துவீா்: பாசனத்துக்காகத் திறந்து விடப்படும் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக பரப்பில் பயிா் சாகுபடி மேற்கொள்ள வேண்டுமென டெல்டா விவசாயிகளை கேட்டுக் கொள்கிறேன்.

நிகழாண்டில் தமிழக அரசு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்து, இதுவரை சுமாா் 22.81 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து நேரிடியாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை படைக்க உள்ளது. இப்போது உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என்று முதல்வா் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதியன்று இதுவரை 15 முறை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2008 ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டுதான் திறக்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட்டது.

ஜூன் 12-ஆம் தேதி அணை  திறக்கப்பட்ட ஆண்டு விவரம்: 1934, 1935, 1939, 1965, 1979, 1980, 1984, 1992,1993, 1994, 1997, 2000, 2001, 2006, 2008.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com