பாடியநல்லூர் ஊராட்சி சார்பில் 8,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பாடியநல்லூர் ஊராட்சி சார்பில் 8,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை
பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாடியநல்லூர் ஊராட்சி சார்பில் 8,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை (மே.19) ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு, பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், துணை வட்டாட்சியர் வாசுதேவன், காவல் ஆய்வாளர் ஜவஹர்பீட்டர், திரைப்பட நடிகரும், பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவருமான தைரியம் குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். 

இதில் தூய்மை பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், என ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். துணைத் தலைவர் சரண்யா ஆனந்த், ஊராட்சி செயலர் சுரேஷ், வார்டு உறுப்பினர்கள் முத்துகண்ணன், ராஜேஷ்,  பிஸ்மில்லா, ராஜவேலு,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com