நீட், ஐஐடி நுழைவு தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி

நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார்படுத்த வேலம்மாள் நெக்சஸ் கல்விக் குழுமத்தின் வேல்ஸ் அகாதெமியில் இணையவழி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நீட், ஐஐடி நுழைவு தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி

சென்னை:  நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார்படுத்த வேலம்மாள் நெக்சஸ் கல்விக் குழுமத்தின் வேல்ஸ் அகாதெமியில் இணையவழி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தக் கல்விக் குழுமம் வெளியிட்ட செய்தி: 
நுழைவுத் தேர்வுகளுக்கான இணையவழி வகுப்புகள் மே 18-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை 65 நாள்கள் நடைபெறும்.  தினமும் காலை 9. 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வீதம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 240 மணிநேர கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படும். இதில் 60 மணிநேரம் பயிற்சி வகுப்புகளாக நடைபெறும்; இறுதியில் அரசுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் போன்று மாதிரித் தேர்வு நடைபெறும்.
முந்தைய நுழைவுத்தேர்வுகளில் வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். பாடவாரியான பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த இணைய வழி வகுப்புக்கு  பதிவு செய்ய www.velammalnexus.com என்ற வலைதளத்தில் உள் நுழையலாம். மேலும் விவரங்களுக்கு 86086 28637, 988413 3552 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com