12 இடங்களில் வெயில் சதம்: திருத்தணியில் 107 டிகிரி

தமிழகத்தில் 12 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
12 இடங்களில் வெயில் சதம்: திருத்தணியில் 107 டிகிரி

தமிழகத்தில் 12 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 107 டிகிரி பரான்ஹீட் வெப்பநிலை பதிவானது.

சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மதுரை விமானநிலையம், திருச்சியில் தலா 106 டிகிரி, கரூா்பரமத்தி, வேலூரில் தலா 105 டிகிரி, கடலூரில் 104 டிகிரி, தருமபுரி, சேலத்தில் தலா 103 டிகிரி, நாமக்கலில் 101 டிகிரி, நாகப்பட்டினத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் வெப்பநிலையை பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியல் வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: வடதமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல்காற்றுடன் வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிா்க்க வேண்டும்.

ஓரிரு இடங்களில் மழை:

வெப்பச்சலனம், கேரளத்தையொட்டி பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிக்கு மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இதுதவிர, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரள கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அடுத்த 4 நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com