தங்கம் பவுன் ரூ.36,192

சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் புதன்கிழமை ரூ.320 அதிகரித்து, ரூ.36,192-க்கு விற்பனையானது.
தங்கம் பவுன் ரூ.36,192

சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் புதன்கிழமை ரூ.320 அதிகரித்து, ரூ.36,192-க்கு விற்பனையானது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, பவுன் தங்கத்தின் விலை ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.4,524-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.52.80-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 அதிகரித்து, ரூ.52,800-க்கும் விற்பனையானது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,524

1 பவுன் தங்கம் ..................... 36,192

1 கிராம் வெள்ளி .................. 52.80

1 கிலோ வெள்ளி ................. 52,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,484

1 பவுன் தங்கம் ..................... 35,872

1 கிராம் வெள்ளி .................. 51.50

1 கிலோ வெள்ளி ................. 51,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com