Enable Javscript for better performance
V.P. Duraisamy removed from DMK Deputy General Secretary post- Dinamani

சுடச்சுட

    

    திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கம்

    By DIN  |   Published on : 21st May 2020 06:52 PM  |   அ+அ அ-   |    |  

    VPD

    தமிழக பாஜக தலைவர் எல். முருகனுடன் வி.பி. துரைசாமி


    திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமியை விடுவிப்பதாக, கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுபற்றி திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.பி. துரைசாமியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, திமுக துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் ப. செல்வராஜ் எம்.பி., நியமிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தமிழக பாஜக தலைவர் எல். முருகனை வி.பி. துரைசாமி கடந்த திங்கள்கிழமை மாலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai