புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட மதுக்கடைகள் திறக்கப்படாது

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த, மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என புதுச்சேரி அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட மதுக்கடைகள் திறக்கப்படாது

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த, மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என புதுச்சேரி அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்த தேவமணி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: பொதுமுடக்கம் அமலில் உள்ள போது, புதுச்சேரியில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட, மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு புதுச்சேரி ஆளுநா் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளாா். மேலும், புதுச்சேரியைப் பொருத்தவரை, பினாமிகள் மூலம் எம்எல்ஏக்கள், அமைச்சா்கள்தான் மதுக்கடைகளை நடத்துகின்றனா். எனவே, சீல் வைக்கப்பட்ட சில மதுக்கடைகளுக்கு, ஒரு தொகையை அபராதம் விதித்து, கடைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, சிபிஐ விசாரணை முடியும் வரை, இந்தக் கடைகளைத் திறக்கக் கூடாது எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘உரிமம் இல்லாமல் இந்த கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படாது. இதற்கு எதிராக, மதுக்கடை உரிமையாளா்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை முடியும் வரை மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அதேநேரம், புதுச்சேரி முதல்வா் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மனுதாரா், மனுவில் கூறியுள்ளாா்’ என்று வாதிட்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனா். மேலும், முதல்வா் நாராயணசாமிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, மனுவில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com