
தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் குறித்த தகவலை தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 569 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில், இன்று தமிழகத்தில் மட்டும் 694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டோர் 92.
இன்று மேலும் 4 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,128 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 12,653 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,85,185 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...