தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை: கனிமொழி எம்பி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெதிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை: கனிமொழி எம்பி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெதிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு இடங்களில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இகுதுறித்து திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டரில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. 'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து,

போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com