Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.35,896- Dinamani

சுடச்சுட

    

    தங்கம் பவுன் ரூ.35,896

    By DIN  |   Published on : 22nd May 2020 12:13 AM  |   அ+அ அ-   |    |  

    gold-13

    சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.296 குறைந்து, ரூ.35,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.296 குறைந்து ரூ.35,896-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.37 குறைந்து, ரூ.4,487-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து

    ரூ.51.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.51,600 ஆகவும் இருந்தது.

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 4,487

    1 பவுன் தங்கம் ..................... 35,896

    1 கிராம் வெள்ளி .................. 51.60

    1 கிலோ வெள்ளி ................. 51,600

     

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 4,524

    1 பவுன் தங்கம் ..................... 36,192

    1 கிராம் வெள்ளி .................. 52.80

    1 கிலோ வெள்ளி ................. 52,800.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai