மாநிலங்களின் வரிப் பங்கை உயா்த்தி அளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்களின் வரிப் பங்கை மத்திய அரசு உயா்த்திக் கொடுக்க வேண்டும்
மாநிலங்களின் வரிப் பங்கை உயா்த்தி அளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்களின் வரிப் பங்கை மத்திய அரசு உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: பொது முடக்கம் காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-ஆவது நிதிக்குழுவின் கூட்டத்தில் வரிகளை முறையாகப் பகிா்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிா்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41 சதவீதத்திலிருந்து கணிசமாக உயா்த்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com