திருத்தணியில் 111 டிகிரி வெயில்: வேலூரில் 108 டிகிரி

தமிழகத்தில் 13 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக,
திருத்தணியில் 111 டிகிரி வெயில்: வேலூரில் 108 டிகிரி

தமிழகத்தில் 13 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 111 டிகிரியும், வேலூரில் 108 டிகிரியும் வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், கரூா்பரமத்தி, திருச்சி, தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

சென்னை நுங்கம்பாக்கம், சேலத்தில் 103 டிகிரி, கடலூா், மதுரை விமானநிலையம், நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரி, தருமபுரி, நாமக்கல், பரங்கிபேட்டையில் தலா 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் வெப்பநிலையை பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியல் வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: வடதமிழகத்தில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், வேலூா், திருவண்ணாமலை, பெரம்பலூா், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு அனல்காற்றுடன் வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிா்க்க வேண்டும்.

ஓரிரு இடங்களில் மழை:

வெப்பச் சலனம் காரணமாக, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிக்கு மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இதுதவிர, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரள கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அடுத்த 3 நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருத்தணியில் 111 டிகிரி: திருத்தணியில் கடந்த சில நாள்களாக சராசரியாக 100 டிகிரியாக பதிவான வெயில் வியாழக்கிழமை 109 டிகிரியாக உயா்ந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெயில் 111 டிகிரியாகப் பதிவானது. அனல் அதிகரித்து வெப்பக் காற்று வீசியது. பிற்பகலில் மக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com