திருப்பூரில் அடகுக் கடையில் கொள்ளை அடித்தவர் கைது

திருப்பூரில் உள்ள நகை அடகுக் கடையில் அரிவாளைக் காட்டி ஊழியர்களை மிரட்டி 10 பவுன் நகை,
திருப்பூரில் அடகுக் கடையில் கொள்ளை அடித்தவர் கைது

திருப்பூரில் உள்ள நகை அடகுக் கடையில் அரிவாளைக் காட்டி ஊழியர்களை மிரட்டி 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற நபரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர், குமரன் சாலையில் தனியார் நகரை அடகுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக தலைக்கவசம் அணிந்து லுங்கியுடன் ஒருவர் வந்துள்ளார். அந்த நபர் கையில் வைத்திருந்த அரிவாளைக் காட்டி நகை அடகு கடை ஊழியர்களை மிரட்டியுள்ளார். பின்னர் கடையிலிருந்த 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தையும் கொள்ளை அடித்து விட்டுத் தப்பிச் சென்றார். 

இதுகுறித்து நகை அடகுக் கடை மேலாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த விசாரணை நடத்தினர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த அழகுராஜா (35) என்பது தெரியவந்தது. 

மேலும், சிறுபூலுவபட்டி பகுதியில் தங்கியிருந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அடகுக்கடை ஊழியர்களை அரிவாளால் மிரட்டும் விடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com