விடைத்தாள் திருத்தும் மையங்களில் தூய்மைப்பணி: கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் தூய்மைப்பணி: கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களாகச் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிளஸ் 2 வகுப்பு மாணவா்களின் விடைத்தாள்கள் வரும் 27-ஆம் தேதி முதல் திருத்தப்படவுள்ளன. பொது முடக்கம் காரணமாக நீண்ட நாள்களாக வகுப்பறைகள் உபயோகப்படுத்தப் படாமல் உள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வேலையாள்களைக் கொண்டு அறைகளை நன்றாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியா்கள் உள்ளே நுழையும் போதும், வெளியே செல்லும்போதும் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்கள், அறைகள் ஆகியவற்றை காலை, மாலை என இரு வேளைகளும் ‘லைசால்’ போன்ற கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com