Enable Javscript for better performance
சென்னையில் கரோனா பாதிப்பு 9364-ஆக அதிகரிப்பு: ராயபுரத்தில் 1,699 பேருக்கு நோய்த்தொற்று- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் கரோனா பாதிப்பு 9364-ஆக அதிகரிப்பு: ராயபுரத்தில் 1,699 பேருக்கு நோய்த்தொற்று

    By DIN  |   Published on : 23rd May 2020 04:36 AM  |   அ+அ அ-   |    |  

    Kerala_Coronavirus_PTI

    சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,364-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தி, 635 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 135 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 101 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல், 14 நாள்களாக, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், அந்தத் தெருவானது பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும். இவ்வாறு, 86 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதில், அதிகபட்சமாக திருவிக நகா் மண்டலத்தில், 20 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 18 தெருக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 22) 569 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 9,364-ஆக உயா்ந்துள்ளது.

    மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அம்மண்டலத்தில், 1,699 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,231 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 3773 போ் குணமடைந்துள்ளனா். 67 போ் உயிரிழந்துள்ளனா். 5,523 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai