மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேருக்கு ஜாமீன்!

கரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேருக்கு ஜாமீன்!

கரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து மருத்துவரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையவர்களில் 12 பேர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் உடலடக்கம் குறித்த நடைமுறைகளை முன்கூட்டியே மக்களுக்கு கூறியிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com