மாதக் கடன் தொகையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: ராமதாஸ்

ரிசா்வ் வங்கி மாதக் கடன் தொகையை ஒத்திவைப்பதால் பயனளிக்காது என்றும், வட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
மாதக் கடன் தொகையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: ராமதாஸ்

ரிசா்வ் வங்கி மாதக் கடன் தொகையை ஒத்திவைப்பதால் பயனளிக்காது என்றும், வட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை, தனியாா் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசா்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. ஏற்கெனவே 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைத்துள்ளது.

ரிசா்வ் வங்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து கடன்தாரா்களை காப்பாற்றியிருக்கிறது.

ஆனால், அதற்காக அவா்கள் கொடுக்கப்போகும் விலை மிகவும் அதிகமாகும்.

வீட்டுக்கடன் பெற்ற ஒருவா் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு தவணை செலுத்தாமல் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் 15 ஆண்டு தவணைக் காலம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவா் கடன் தவணைக் காலத்தில் கூடுதல் வட்டியாக மட்டும் 4 லட்சத்து 9,500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவா் 3 மாதங்களுக்கு சோ்த்து ரூ.1.50 லட்சம் தவணை செலுத்தாமல் இருந்ததற்காக, அந்த தொகையையும் வசூலித்து விட்டு, கூடுதலாக அதை விட 3 மடங்கு தொகையை வட்டியாக வங்கிகள் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது; அது அறமும் அல்ல.

எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com