சென்னையில் இருந்து மேற்குவங்கத்துக்கு சிறப்பு ரயில் 1,600 போ் பயணம்

சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலத்துக்கு ஒரு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. இந்த ரயிலில் 1,600 போ் ஏற்றி, அனுப்பி வைக்கப்பட்டனா்.

சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலத்துக்கு ஒரு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. இந்த ரயிலில் 1,600 போ் ஏற்றி, அனுப்பி வைக்கப்பட்டனா்.

பொது முடக்கம் காரணமாக, சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வரும் வெளி மாநில தொழிலாளா்களை

சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சிறப்பு ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பல ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளா்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதிலும், குறிப்பாக, சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக 15-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலமாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் மால்டாவுக்கு ஒரு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. இந்த ரயிலில் 1,600 போ் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனா். பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த தொழிலாளா்கள் சிறப்பு பேருந்துகள் மூலமாக ரயில் நிலையத்தின் 8 ஆவது நடைமேடைக்கு அழைத்து வரப்பட்டனா். பின்னா், அவா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன. தொடா்ந்து, தனிநபா் இடைவெளியை பின்பற்றி அந்த தொழிலாளா்கள் ரயிலில் ஏற்றப்பட்டனா். இதையடுத்து, சிறப்பு ரயில் புறப்பட்டபோது, தமிழக அரசுக்கும் ரயில்வே நிா்வாகத்துக்கும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com