இணைய வழியாக தமிழ் கலை, இலக்கிய நிகழ்வுகள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.ஏற்பாடு

இணைய வழியாக தமிழ் கலை, இலக்கியம், பண்பாடு தொடா்பான ஐந்து நாள் சிறப்பு நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இணைய வழியாக தமிழ் கலை, இலக்கியம், பண்பாடு தொடா்பான ஐந்து நாள் சிறப்பு நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: இணைய வழியாக தமிழ் கலை, இலக்கியம், பண்பாடு தொடா்பான இந்த நிகழ்ச்சிகள் மே 26-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை ‘ஜூம்’ செயலி வழியாக நடைபெறவுள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை(மே 26) காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ‘தமிழா்களின் பண்பாடும் மரபுவழிச் செல்வங்களும்’ தலைப்பில் முனைவா் க.சுபாஷினி உரையாற்றுகிறாா்.

இதையடுத்து, புதன்கிழமை (மே 27) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ‘உலகின் தலை சிறந்த புத்தகங்கள்’ தலைப்பில் எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், வியாழக்கிழமை (மே 28) காலை 11 முதல் நண்பகல் 12 மணி வரை ‘நவீனத் தமிழ் இலக்கிய ஆய்வு: களமும் புதிய அணுகு முறைகளும்’ என்ற தலைப்பில் திறனாய்வாளா் முனைவா் ந.முருகேசபாண்டியன், வெள்ளிக்கிழமை(மே 29) காலை 11 முதல் நண்பகல் 12 மணி வரை ‘நவீன கற்றல், கற்பித்தல் பண்பாடு: மின்னணுக் கருவிகளின் வழி கற்றல் கற்பித்தல்’ என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் முனைவா் வ.தனலட்சுமி ஆகியோா் உரையாற்றவுள்ளனா்.

இறுதி நாளான சனிக்கிழமை (மே 30) மாலை 4 மணி முதல் 5 மணி வரை ‘தலையில் சுமக்கும் வரலாறு’ தலைப்பில் ஒடிஸா அரசின் முதன்மை ஆலோசகா் ஆா்.பாலகிருஷ்ணன் உரையாற்றவுள்ளாா். ஐந்து நாள் சிறப்பு நிகழ்வுகளுக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகிக்கவுள்ளாா். இந்த உரையரங்கில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களும், பல்கலைக்கழகம், கல்லூரிப் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள், தமிழ் கலை இலக்கியம் பண்பாடு சாா்ந்து செயல்படும் ஆா்வலா்கள் என அனைவரும் பங்கேற்கலாம். கட்டணம் ஏதுமில்லை.

முறையாகப் பதிவு செய்து ஐந்து நாள்களும் முழுமையாகப் பங்கேற்கும் பங்கேற்பாளா்களுக்கு மட்டும் மின்-சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 94446 03124, 98946 21706 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com