காரைக்கால் - திருவாரூர் வழித்தடத்தில் மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

காரைக்காலில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் பெட்டியில், திருவாரூர் வரையிலான மின்சார ரயில் சோதனை ஓட்டத்தை ரயில்வே..
காரைக்கால் - திருவாரூர் வழித்தடத்தில் மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

காரைக்காலில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் பெட்டியில், திருவாரூர் வரையிலான மின்சார ரயில் சோதனை ஓட்டத்தை ரயில்வே பாதுகாப்புக் குழுவினர் சனிக்கிழமை மேற்கொண்டனர்.

ரயில்வே தடங்கள் மின் மயமாக்கும் பணி பரவலாகச் செய்யப்பட்டுவருகிறது. தெற்கு ரயில்வே கோட்டத்தில் திருச்சி முதல் தஞ்சாவூர்,  தஞ்சாவூர் முதல் திருவாரூர் தடத்தில்  மின் பாதையாக மாற்றம் செய்து சோதனை ஓட்டம் நிறைவடைந்தது.

திருவாரூர் - நாகை - காரைக்கால் மார்க்கம்  மின் மயமாக்கும் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் செய்யப்பட இருந்தது. கரோனா தீநுண்மி பரவலால் இப்பணி தடைப்பட்டது.

இதனிடையே தெற்குப் பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினர் திருவாரூர் } காரைக்கால் வழித்தடத்தில் சோதனை ஓட்டப் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனர்.

திருவாரூரிலிருந்து காரைக்காலுக்கு ரயிலில் தடத்தைச்  சோதனை செய்தவாறு காரைக்காலுக்கு பிற்பகல் 1.15 மணிக்கு வந்தனர்.  காரைக்கால் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மின் மையத்தை இக்குழுவினர் பார்வையிட்டனர்.

காரைக்காலில் தயாராக நிறுத்திவைத்திருந்த மின்சார ரயில் என்ஜினுடன் சோதனைக் குழுவினர் வந்த பெட்டிகள் இணைப்பு செய்யப்பட்டது. 2.30 மணியளவில் மின்மயமாக்கப்பட்ட பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.

முன்னதாக ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.ஏ.மனோகரன் கூறுகையில் ரயில்வே மின் மயமாக்கப்படும் பணி விரிவான திட்டம். இதில் திருச்சி - காரைக்கால் வழித்தடத்தில் திருவாரூர் முதல் காரைக்கால் வரையிலான திட்டப்பணி நிறைவடைந்ததும் நடத்தப்படவேண்டிய முதல்கட்ட சோதனை ஓட்டம் (டிராக் சோதனை) தற்போது நடத்தப்பட்டது.

திருவாரூர் - காரைக்கால் தடத்தில் மின் மயமாக்கும் திட்டம் ஏறக்குறைய ரூ.25 கோடியில் நிறைவுபெற்றது. இந்த சோதனையானது 75 கி.மீட்டர் வேகத்தில் நடத்தப்படுகிறது. இதன் பிறகு 2 கட்ட சோதனை நடத்தப்படும். சோதனை அறிக்கை சாதகமாக தரப்படும்பட்சத்தில் மின்சார ரயில் இயக்கம் இந்த மார்க்கத்தில் தொடங்கும் என்றார். பேட்டியின்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அஜய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com