அடுத்த 2 தினங்களுக்கு கடும் வெப்பம் வாட்டும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடும்வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 தினங்களுக்கு கடும் வெப்பம் வாட்டும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடும்வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும்.

எனவே இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com