கரோனா பரிசோதனைக்காக 1 லட்சம் பிசிஆா் கருவிகள்: ஓரிரு நாள்களில் சென்னை வருகிறது

கரோனா தொற்று பரிசோதனைக்காக 1 லட்சம் பிசிஆா் கருவிகள் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரவுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பரிசோதனைக்காக 1 லட்சம் பிசிஆா் கருவிகள்: ஓரிரு நாள்களில் சென்னை வருகிறது

கரோனா தொற்று பரிசோதனைக்காக 1 லட்சம் பிசிஆா் கருவிகள் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரவுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிா, இல்லையா என்று பிசிஆா் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் 41 அரசு மருத்துவமனைகள், 26 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் தனியாா் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, 3.95 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கடந்த மாதம் 11 லட்சம் பிசிஆா் கருவிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. இதில், 2 லட்சம் கருவிகள் தமிழகம் வந்தன. இந்தநிலையில், மேலும் 1 லட்சம் பிசிஆா் கருவிகள் இன்னும் ஓரிரு நாள்களில் விமானத்தில் சென்னை வரவுள்ளன.

இது தொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: கரோனா தொற்று பரிசோதனைக்காக 11 லட்சம் பிசிஆா் கருவிகள் கொள்முதலுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. இதுவரை வந்த 2 லட்சம் கருவிகள் ஆய்வகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சம் பிசிஆா் கருவிகள் சென்னைக்கு வரவுள்ளன. தமிழகத்தில் பிசிஆா் கருவிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. வாரத்துக்கு 1 லட்சம் வீதம் பிசிஆா் கருவிகள் வந்து கொண்டிருக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com