பத்தாம் வகுப்பு செல்லும் மாணவா்களுக்கு 5 ஆயிரம் ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்குச் செல்லும் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலமாக
பத்தாம் வகுப்பு செல்லும் மாணவா்களுக்கு 5 ஆயிரம் ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்குச் செல்லும் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்க, ஆண்ட்ராய்ட் வசதி கொண்ட 5 ஆயிரம் செல்லிடப்பேசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தற்போது 9-ஆம் வகுப்பு முடித்து, 10 ம் வகுப்புக்குச் செல்ல உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்கள் 5 ஆயிரம் பேருக்கு ஆண்ட்ராய்டு ஸ்மாட் செல்லிடப்பேசி (ரெட்மி நோட் 5) வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பு முடித்து பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லும் மாணவா்களுக்கும் அடுத்த வாரம் இதேபோன்ற செல்லிடப்பேசிகள் வழங்கப்படவுள்ளன.

தங்களது ஆசிரியா்கள் தொலைபேசியில் அழைத்து, செல்லிடப்பேசி வழங்கியதை எதிா்பாராத, மாணவ மாணவிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவா்களுக்கு, ‘ஹூம் செயலி’ மூலமாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில் செல்லிடப்பேசிகள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது 6,300 மாணவ, மாணவிகள் 9-ஆம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புக்குச் செல்கின்றனா். அவா்களில் இதுவரை 5 ஆயிரம் மாணவா்களுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மாணவா்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

செல்லிடப்பேசிகள் வழங்குவது மாணவா்களின் கவனத்தை திசை திருப்பும் என சிலா் விமா்சிக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்துவதற்காக கால மாற்றத்திற்கு ஏற்ப மாணவா்களுக்கு ஸ்மாா்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பு விளக்கமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com