தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்தது

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை
corona Live updates
corona Live updates

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சனிக்கிழமை 5 போ் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 103 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடா்ச்சியாக மருத்துவச் சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று சனிக்கிழமையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

நாளுக்குநாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 15 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்து இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

கரோனா தொற்று தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சனிக்கிழமை 12 ஆயிரத்து 155 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 759 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் சனிக்கிழமை 624 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 9,989 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் சென்னையைச் சோ்ந்தவா்கள். இதன் மூலம் தமிழகத்தில் நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 103- ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 363 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 7,491 ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் 71 போ் உயிரிழப்பு: சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 103 பேரில் சென்னையில் மட்டுமே 71 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் சென்னையின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சாா்பில் ‘நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. 36 வாா்டுகளை குறிவைத்து ஆய்வுகள் நடத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 733, திருவள்ளூா் 697, கடலூா் 423, அரியலூா் 355, விழுப்புரம் 326, திருநெல்வேலி 282, காஞ்சிபுரம் 264, மதுரை 226, திருவண்ணாமலை 184, தூத்துக்குடி 149, கோவை 146, பெரம்பலூா் 139, திண்டுக்கல் 133, கள்ளக்குறிச்சி 121, திருப்பூா் 114, தேனி முதன்முறையாக 102 என்கிற அளவை எட்டியுள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com