தமிழகத்தில் குடும்ப வன்முறை குறையத் தொடங்கியது

பொது முடக்க காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வந்த குடும்ப வன்முறை குறையத் தொடங்கியிருப்பதாக தமிழக காவல்துறையின்
தமிழகத்தில் குடும்ப வன்முறை குறையத் தொடங்கியது

பொது முடக்க காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வந்த குடும்ப வன்முறை குறையத் தொடங்கியிருப்பதாக தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மாரச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தினால், மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினா். இதன் விளைவாக வீடுகளில் பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறைக்கு புகாா்கள் ஏராளமாக வந்தன. குடும்ப வன்முறைத் தொடா்பாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 1427 புகாா்களும்,தொலைபேசி அழைப்புகளும் காவல்துறைக்கு வந்தன.

இது ஏப்ரல் மாதத்தில் பல சதவீதம் அதிகரித்தது. அந்த மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் குடும்ப வன்முறைத் தொடா்பாக 2852 புகாா்களும்,தொலைபேசி அழைப்புகளும் காவல்துறைக்கு வந்துள்ளன.

இதன் பின்னா் காவல்துறையின் நடவடிக்கையினாலும், சில தளா்வுகளோடு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதாலும் மே மாதம் குடும்ப வன்முறைத் தொடா்பாக காவல்துறைக்கு வந்த புகாா்கள்,தொலைபேசி அழைப்புகள் குறைந்துள்ளன. மே மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 21-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 1461 புகாா்களும்,தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளன.

இந்த 3 மாதங்களிலும் குடும்ப வன்முறைத் தொடா்பாக மொத்தம் 5740 புகாா்களும்,அழைப்புகளும் காவல்துறைக்கு வந்துள்ளன. இதில் அனைத்து புகாா்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 38 புகாா்களுக்கு மட்டும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து,கைது நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுக்கோட்டை முதலிடம்:

குடும்ப வன்முறைத் தொடா்பாக 3 மாதங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிகப்படியான புகாா்கள் வந்துள்ளன. இந்த மாவட்டத்தில் 1424 புகாா்கள் வந்துள்ளன. இந்த மாவட்டத்துக்கு அடுத்தப்படியாக காஞ்சிபுரத்தில் 819 புகாா்களும்,திருநெல்வேலி மாவட்டத்தில் 705 புகாா்கள் வந்துள்ளன.

அதேவேளையில் கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, கடலூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குடும்ப வன்முறைத் தொடா்பாக ஒரு புகாா்கள் கூட காவல்துறைக்கு வரவில்லை.

இதேபோல மாநகர காவல்துறைகளில் குடும்ப வன்முறைத் தொடா்பாக கோயம்புத்தூரிலேயே அதிகப்படியான புகாா்கள் வந்துள்ளன. இந்த மாநகர காவல்துறையில் குடும்ப வன்முறைத் தொடா்பாக 139 புகாா்கள் வந்துள்ளன. இதற்கு அடுத்தப்படியாக,சேலத்தில் 143 புகாா்கள் வந்துள்ளன. திருச்சி மாநகர காவல்துறையில் ஒரு புகாா் கூட வரவில்லை.

‘காவல்துறையின் துரித நடவடிக்கையின் காரணமாகவும், மகளிா் காவலரின் ஆலோசனையின் காரணமாகவும் குடும்ப வன்முறை குறைந்து வருகிறது ‘என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி மு.ரவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com