தங்கம் பவுன் ரூ.36,352

தங்கம் பவுன் ரூ.36,352

சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.36,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.36,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து ரூ.36,352-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.4,544-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயா்ந்து ரூ.52.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயா்ந்து ரூ.52,100 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,544

1 பவுன் தங்கம் ..................... 36,352

1 கிராம் வெள்ளி .................. 52.10

1 கிலோ வெள்ளி ................. 52,100

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,528

1 பவுன் தங்கம் ..................... 36,224

1 கிராம் வெள்ளி .................. 51.40

1 கிலோ வெள்ளி ................. 51,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com