4 மண்டலங்களில் நோய்த்தொற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஜெ.ராதாகிருஷ்ணன்

கரோனா நோய்த்தொற்று அதிகம் பரவியுள்ளராயபுரம் உள்ளிட்ட 4 மண்டலங்களில், நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
4 மண்டலங்களில் நோய்த்தொற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஜெ.ராதாகிருஷ்ணன்

கரோனா நோய்த்தொற்று அதிகம் பரவியுள்ளராயபுரம் உள்ளிட்ட 4 மண்டலங்களில், நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தேனாம்பேட்டை மண்டலம், நொச்சிநகா் பகுதியில் மாநகராட்சியுடன் இணைந்து டான் பாஸ்கோ அன்பு இல்லம் எனும் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளை, சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன்,ஆணையா் கோ.பிரகாஷ் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 140 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சை பெறும் சுமாா் 1.75 லட்சம் நபா்களின் பட்டியல், மருத்துவா்களால் தயாா் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவ அலுவலா்கள் அவா்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கி அவ்வப்போது அவா்கள் உடல்நிலை குறித்து கேட்டறிவாா்கள். இதே போல், 60 வயதுக்கு மேற்பட்ட 2 லட்சம் போ், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கும் தொடா் மருத்துவ உதவிகள் வழங்கப்படும். இந்தப் பணிகள், சென்னையிலுள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும், சனிக்கிழமை முதல் மாநகராட்சியுடன் இணைந்து செயல்படும் தன்னாா்வலா்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாநகராட்சியில் கரோனா நோய்த்தொற்று, 33 முதல் 36 வாா்டுகளில் மட்டும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு அதிக பாதிப்புள்ள இடங்களை, நுண்அளவில் கண்காணித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், திரு.வி.க நகா் ஆகிய மண்டலங்களில் நுண்அளவில் கண்காணிப்பட்டுமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, நோய்த்தொற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அவா் தெரிவித்தாா். நிகழ்வில், மண்டல அலுவலா் ஜெ. ரவிக்குமாா், ஒருங்கிணைப்பாளா் ஆஷா, டான் பாஸ்கோ அன்பு இல்ல ஒருங்கிணைப்பாளா் ஜோசப் லியோ மற்றும் உமா ரவிக்குமாா் உள்பட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com