கிராமப்புற மாணவா்களுக்காக அரசுக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

கிராமப்புற மாணவா்கள் விரும்பிய பாடப்பிரிவை படிப்பதற்காக தமிழக அரசுக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக
கிராமப்புற மாணவா்களுக்காக அரசுக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

கிராமப்புற மாணவா்கள் விரும்பிய பாடப்பிரிவை படிப்பதற்காக தமிழக அரசுக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் மே 27-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து தேடுதல் குழு அமைக்கப்பட்டு மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, சமா்ப்பிக்கப்படும் பெயா் பட்டியலின் அடிப்படையில் புதிய துணைவேந்தரை ஆளுநா் தோ்வு செய்வாா்.

தற்போது அரசு கல்லூரிகளில் போதுமான அளவு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் தேவையான கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அரசுக் கல்லூரிகளில் ஒரு நாளைக்கு ஒரு கட்டமாக, மாணவா்கள் காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே கல்லூரிக்கு சென்று பயிலும் நிலை உருவாகும். கிராமப்புற மாணவா்கள் விரும்பிய பாடப்பிரிவை படிப்பதற்காக தமிழக அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com