பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி மனு

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி மனு

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இமானுவேல் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் தற்போது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தால் பலா் வேலையிழந்து வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனா். என்னைப் போல, குறைந்த வருவாய் ஈட்டுபவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். சீனா, இத்தாலி போன்ற நாடுகள் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க முழு பொது முடக்கத்தை அறிவித்தன. ஆனால் ஸ்வீடன், தென்கொரியா போன்ற நாடுகள் முழு பொதுமுடக்கத்தை அறிவிக்காமல் நோய்த்தொற்று பரவாமல் தடுத்துள்ளன. இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக உலகில் இருவேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், இந்த நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டறியப்படாத வரை, இந்நோய் நம்முடன்தான் இருக்கும். எனவே நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை கடைப்பிடித்தாலே நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்கலாம். எனவே, பொது முடக்கத்தை நீட்டித்து கடந்த மே 17-ஆம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com