காலமானார்: சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டம் பெற்ற ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி (89) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
காலமானார்: சிங்கம்பட்டி ஜமீன்தார்  டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி

அம்பாசமுத்திரம்: சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டம் பெற்ற ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி (89) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

தென் தமிழகத்தில் மிகவும் பழமையானது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி.1100 ஆம் ஆண்டில் உருவான இந்த சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டத்தை தனது மூன்றரை வயதில் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. 29.09.1931இல் பிறந்த இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர்.

மேலும் சிங்கம்பட்டி ஜமீனுக்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் உள்பட 8 கோயில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் ராஜ உடையில் மக்களுக்குக் காட்சியளித்து வந்தார்.

அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை கட்டுவதற்கு சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் இலவசமாக இடம் வழங்கப்பட்டுள்ளதால் தீர்த்தபதி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கம்பட்டியில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் காலமானார். இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com