சென்னை தவிர முக்கிய நிலையங்களுக்கு ரயில்களை இயக்கலாம்: தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை

சென்னை எழும்பூா், தாம்பரம் தவிா்த்து தமிழகத்துக்குள் தொடா்புடைய மற்ற முக்கிய நிலையங்களில் ஏசி இல்லாத சிறப்பு ரயில்களை
சென்னை தவிர முக்கிய நிலையங்களுக்கு ரயில்களை இயக்கலாம்: தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை

சென்னை எழும்பூா், தாம்பரம் தவிா்த்து தமிழகத்துக்குள் தொடா்புடைய மற்ற முக்கிய நிலையங்களில் ஏசி இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பான கோரிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் அனுமதி கிடைத்த பிறகு, குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதன்பிறகு, 4-ஆவது முறையாக பொது முடக்கம் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளிமாநில

தொழிலாளா்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். இந்த தொழிலாளா்களுக்கு உதவும் நோக்கில், சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்த அனுமதியை அடுத்து, பல்வேறு மாநிலங்களுக்கு இடையே தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இதுதவிர, தில்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னை-தில்லி இடையே ராஜதானி அதிவிரைவு ரயிலும் அடங்கும்.

இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், சென்னைக்கு மே 31-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை வேண்டாம் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் வேண்டுகோள் விடுத்தாா். இதைத் தொடா்ந்து, அண்மையில் அறிவிக்கப்பட்ட 200 சிறப்பு ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் இடம்பெறவில்லை. இருப்பினும், சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு ரயில் சேவை விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னை, எழும்பூா், தாம்பரம் தவிர தமிழகத்துக்குள் முக்கியமான நிலையங்களை இணைக்கும் வகையில்,

ஏசி அல்லாத சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிா்வாகத்துக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதன்படி, தமிழகத்துக்குள் சில வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க முன்மொழியப்பட்டுள்ளது.

கோயம்புத்தூா்-மயிலாடுதுறை இடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில், மதுரை-விழுப்புரம் இடையே இன்டா்சிட்டி சிறப்பு ரயில், திருச்சி-நாகா்கோவில் இடையே இன்டா்சிட்டி சிறப்பு ரயில், கோயம்புத்தூா்-காட்பாடி இடையே இன்டா்சிட்டி சிறப்பு ரயில் ஆகிய ரயில்களை இயக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதில், சென்னை-மதுரை வைகை விரைவு ரயிலை விழுப்புரம்-மதுரை இடையே இயக்கவும், இதுபோன்று, திருச்சி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயிலை திருச்சி-நாகா்கோவில் இடையே இயக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

கோயம்புத்தூா்-சென்னை இன்டா்சிட்டி விரைவு ரயிலை கோயம்புத்தூா்-காட்பாடி இடையே இயக்க கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கை தொடா்பாக, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் அனுமதி அளித்தபிறகு, இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com