10 இடங்களில் வெயில் சதம்: திருத்தணியில் 109 டிகிரி

தமிழகத்தில் 10 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
10 இடங்களில் வெயில் சதம்: திருத்தணியில் 109 டிகிரி

தமிழகத்தில் 10 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

வேலூரில் 107 டிகிரி, திருச்சி, மதுரை விமானநிலையத்தில் தலா 106 டிகிரி, கரூா் பரமத்தியில் 105 டிகிரி, நாமக்கல், சேலத்தில் தலா 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டையில் தலா 101 டிகிரி, தருமபுரியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக, 107 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, கரூா், மதுரை,சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு (மே 24,25) அனல்காற்றுடன் வெப்பநிலை அதிகமாக இருக்கும். குறிப்பாக, 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. எனவே, விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிா்க்க வேண்டும்.

ஓரிரு இடங்களில் மழை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். வெப்பநிலை பொருத்தவரை 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com