பிகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 தொழிலாளர்கள், செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாழப்பாடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பிகார் மாநில தொழிலாளர்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தனியார் தொழிற்சாலைகள், இதர நிறுவனங்களில் தங்கி பணிபுரிந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில், வாழப்பாடி வட்டாட்சியர் ஜானகி தலைமையிலான வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளனர்.

வாழப்பாடி பகுதியில் தங்கி பணிபுரிந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 தொழிலாளர், சொந்த ஊருக்குத் திரும்ப இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். இந்தத் தொழிலாளர்கள் அனைவரும்,  செவ்வாய்க்கிழமை வாழப்பாடியில் இருந்து அரசு பேருந்தில் சேலம் தனியார் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரோனா மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சேலத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் பிகார் மாநிலத்திற்குச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com