போக்குவரத்து விதிமீறல்: ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதி இன்று தொடக்கம்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான குற்றங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் "விர்சுவல் கோர்ட்ஸ்' முறையை உச்சநீதிமன்ற
போக்குவரத்து விதிமீறல்: ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதி இன்று தொடக்கம்


சென்னை: போக்குவரத்து விதிமீறல் தொடர்பான குற்றங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் "விர்சுவல் கோர்ட்ஸ்' முறையை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார். 

தமிழகம் முழுவதும் தலைக்கவசம் அணியாமை உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிப்பார்கள். இந்த அபராதத் தொகையை, போக்குவரத்து போலீஸாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலோ செலுத்தலாம். தற்போது, இந்த அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் "விர்சுவல் கோர்ட்ஸ்' வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முதன்முதலாக தில்லியில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் இந்த வசதியை, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 

இதன் தொடக்க விழா, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன்னிலையில் நடைபெறுகிறது.

இதன்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு  போலீஸாரிடம் இ-சலான் பெறும் நபர்கள், இணையதளத்தில் "விர்சுவல் கோர்ட்ஸ்' பக்கத்தில் தங்களது செல்லிடப்பேசி எண், வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த "விர்சுவல் கோர்ட்ஸ்' முறையில் அபராதம் செலுத்தும் வசதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான உயர்நீதிமன்ற கணினி குழு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com