கட்டுக்குள் இருக்கிறது கரோனா பரவல்; அச்சம் வேண்டாம்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கட்டுக்குள் இருக்கிறது கரோனா பரவல்; அச்சம் வேண்டாம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது, கரோனா தொற்றைப் பற்றி மக்கள் அச்சப்பட வண்டாம். ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். மக்கள் தொகை அதிகம் இருக்கும் சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கைக் குறைவாகவே உள்ளது. 

சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் என்பதால் தொற்று வேகமாகப் பரவுகிறது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வருகிற மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், முதல்வரின் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதிருப்பார் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com