ஜூன் 10ஆம் தேதி வரை திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது

திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 10ஆம் தேதி வரை திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது

திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் சார்பில் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு , தயாநிதி மாறன் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினர். இந்த சந்திப்புக்குப் பின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்,  தாங்கள் மூன்றாம் தர மக்கள் போல் நடத்தப்பட்டதாகவும், தாங்கள் என்ன தாழ்த்தப்ட்டவர்களா என சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர், கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி,  திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனுவில், யாரையும் புண்படுத்தும் நோக்கில் தாங்கள் கருத்து கூறவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com