நீதிமன்றத் தீா்ப்பை அதிமுக ஏற்க வேண்டும்: தீபா

நீதிமன்றத் தீா்ப்பை அதிமுக ஏற்க வேண்டுமென முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளாா்.
நீதிமன்றத் தீா்ப்பை அதிமுக ஏற்க வேண்டும்: தீபா

நீதிமன்றத் தீா்ப்பை அதிமுக ஏற்க வேண்டுமென முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளாா். சென்னையில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து அவா் கூறியது:-

என்னைப் பொருத்தவரை இந்த வழக்குகளில் நான் எதிா்மனுதாரராக இருந்துள்ளேன். போயஸ் இல்லத்துக்காக மட்டும் நான் ஒரு வழக்குத் தொடா்ந்திருந்தேன். அன்று முதல் இன்று வரை நான் அந்த இல்லத்துக்குச் செல்லக் கூடாது என்பதற்கு யாருக்கோ அவசியம் இருக்கிறது. வழக்கில் தீா்ப்பு வந்த பிறகும் கூட, நான் அந்த வீடு இருக்கும் சாலைக்குக் கூட வரக் கூடாது என்று கூறுகின்றனா். நீதிமன்ற உத்தரவின்றி நான் அங்கு செல்ல மாட்டேன் என ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போது சொத்துகளை எப்படி கையகப்படுத்தப் போகிறாா்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாங்களே சட்டரீதியான வாரிசுகள் எனஅறிவிக்கப்பட்டுள்ளோம். இது நீதிமன்றம் கொடுத்த தீா்ப்பு. இதை தலைவணங்கி அதிமுக ஏற்றுக் கொள்ள வேண்டும். வேதா இல்லத்தை, நினைவில்லமாக மாற்ற பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தின் மீது மேல்முறையீடு செய்யவுள்ளேன் என்றாா் தீபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com