தங்கம் பவுன் ரூ.35,808

சென்னையில் ஆபரணத்தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.35,808-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.35,808

சென்னையில் ஆபரணத்தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.35,808-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன்ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைக் கடந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் கடந்தது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.35, 808-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து , ரூ.4,476-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.52.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்துது ரூ.52,700 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,476

1 பவுன் தங்கம் ..................... 35,808

1 கிராம் வெள்ளி .................. 52.70

1 கிலோ வெள்ளி ................. 52,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,485

1 பவுன் தங்கம் ..................... 35,880

1 கிராம் வெள்ளி .................. 52.40

1 கிலோ வெள்ளி ................. 52,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com