ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பொது முடக்கக் காலத்தில் பயன்படுத்த முடியாத நிலையிருந்ததால், ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்று
ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பொது முடக்கக் காலத்தில் பயன்படுத்த முடியாத நிலையிருந்ததால், ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

கரோனா நோய்த்தடுப்பையொட்டி மாா்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது பொது முடக்கக் காலம் முதல் அனைத்து புகா் ரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விரைவில் புகா் ரயில் சேவைகள் துவங்குவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு ரயில் நிறுத்தங்கள் இடையே பயணம் செய்யும் வகையில் மாதாந்திர ரயில்வே சீசன் டிக்கெட்டுகளைப் பெற்றிருக்கின்றனா்.

ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரையிலான ரயில்வே சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தியே பெற்றிருக்கின்றனா். இந்நிலையில் தொடா்ச்சியாக பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்களின் ரயில் போக்குவரத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் பணம் கட்டி பெறப்பட்டிருந்த சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் போனதோடு அவற்றிற்கான காலமும் முடிவடைந்திருக்கிறது. எனவே, புகா் ரயில் சேவைகள் மீண்டும் துவங்கும் போது ஏற்கெனவே இவா்களுக்கு ரயில்வே சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் போன காலத்துக்கு ஈடாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா். இது குறித்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கும் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com